அஜித்தின் ரோல் மாடல் ரேஸர்.. காலுக்கு முத்தம் கொடுத்து மரியாதை செலுத்திய அஜித்

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பாவில் நடக்கும் GT 4 சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். கார் ரேஸில் முழு கவனம் செலுத்துவதால் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டு இருக்கிறார்.
இந்த வருடம் நவம்பரில் தான் தனது அடுத்த பட ஷூட்டிங் தொடங்கும் என அஜித் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.
அயர்டன் சென்னாவுக்கு மரியாதை
இந்நிலையில் அஜித் இன்று தனது ரோல் மாடல் ரேஸர் அயர்டன் சென்னாவின் சிலைக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்.
அவரது சிலையின் ஷூவுக்கு முத்தம் கொடுத்து, முன்பு மண்டியிட்டு அவர் வணங்கி இருக்கிறார்.
பார்முலா ஒன கார் ரேஸில் முன்னணியில் இருந்த அயர்டன் சென்னா 1994 San Marino Grand Prixல் நடந்த விபத்தில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.