விஜய்யின் சச்சின் பட ரீ-ரிலீஸ் குறித்து நடிகை ஜெனிலியா போட்ட போஸ்ட்…
சச்சின் படம்
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று சச்சின்.
கடந்த 2005ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் இப்படம் வெளியாகி இருந்தது.
மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் காதல் படங்களில் இந்த படம் முக்கிய பங்கு வகிக்கும். விஜய் மற்றும் ஜெனிலியா இடையே மிக அழகான கெமிஸ்ட்ரி இருக்கும், இந்த ஜோடி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.
ரீ-ரிலீஸ்
ரசிகர்களின் ஸ்பெஷல் படமாக அமைந்துள்ள சச்சின் திரைப்படம் இந்தாண்டு ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம்.
படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் கோடையில் இப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை ஜெனிலியா, சச்சின் எப்போதும் எனது மனதிற்கு நெருக்கமான படம் என போஸ்ட் போட்டுள்ளார்.