பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் நடிகை ஐஸ்வர்யா..

பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் நடிகை ஐஸ்வர்யா..

ஐஸ்வர்யா அர்ஜுன்

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் நடிகை ஐஸ்வர்யா.. | Aishwarya Arjun Missed Blockbuster Movie Chance

இதை தொடர்ந்து Prema Baraha, சொல்லிவிடவா போன்ற படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் தனது தந்தை அர்ஜுன் இயக்கிய சீதா பயணம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் நடிகை ஐஸ்வர்யா.. | Aishwarya Arjun Missed Blockbuster Movie Chance

தவறவிட்ட வாய்ப்பு 

கடந்த ஆண்டு நடிகர் உமாபதி ராமையாவுக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் காதல் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வரும் ஐஸ்வர்யா அர்ஜுன், தான் தவறவிட்ட பிளாக்பஸ்டர் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் நடிகை ஐஸ்வர்யா.. | Aishwarya Arjun Missed Blockbuster Movie Chance

இதில், “கீதா கோவிந்தம் பட வாய்ப்பை சில காரணங்களால் தவறவிட்டேன். அந்த படம் பல நடிகைகளிடம் சென்றதாகவும் பின்னர் நான் கேள்விப்பட்டேன். இறுதியில் அந்த படம் சிறப்பாக அமைந்தது. நான் நடிக்க தவறிய பல படங்கள் பின்னர் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன” என கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *