ரவி மோகனின் வாழ்க்கையை நானா கெடுத்தேன்… பாடகி கெனிஷா பரபரப்பு வீடியோ

பாடகி கெனிஷா
பாடகி கெனிஷா, இவர் தமிழ் மக்களிடம் பாடல்கள் மூலம் பிரபலமானாரோ இல்லையோ, ஆனால் பிரபல நடிகருடனான கிசுகிசு மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதற்கு இடையில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதற்கு காரணம் ரவி மோகனின் தோழி கெனிஷா தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
வீடியோ
இந்த நிலையில் பாடகி கெனிஷா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கிறது, தமிழகத்தில் புதிய ஆட்சி என இப்படி நிறைய விஷயங்கள் நடக்கிறது.
அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் தப்பான விஷயங்களாக அதிகம் பேசுகிறீர்கள். 4 வயதில் இருந்தே நான் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டேன், எனது பெற்றோர்கள் இருவரையும் இழந்துவிட்டேன்.
18 வயதில் திருமணம், அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கொடுமை, வயிற்றில் இருந்த குழந்தை இறப்பு என எனது வாழ்க்கையில் நான் நிறைய இழப்பை சந்தித்துள்ளேன், நிறைய வலிகள் பார்த்துள்ளேன்.
அம்மா, அப்பா, குழந்தை என அனைத்தையும் இழந்த நான், ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா?
அவர் தனது வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டத்தில் சிகிச்சைக்காக தன்னை அணுகியபோதுதான் உதவினேன்.
அவர் ஒன்றும் குழந்தை இல்லை, அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு எடுக்கக் கூடியவர் அவர்தான். அப்படி இருக்கும்போது என்னை ஏன் இதில் இழுக்கிறீர்கள்? சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சனைகள் ஏராளம் உள்ளன, அவற்றை பேசுங்கள் என்று கூறியுள்ளார்.






