தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள்

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள்

தமிழகத்தில் த்ரில் அனுபவம் மற்றும் அட்வென்ச்சர் பயணம் விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற 7 இடங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழகத்தில் அனைத்து வகையான நிலபரப்புகளும் உள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடற்கரை நிறைந்தவையாகவும், மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் மலைகள் நிறைந்தவையாகவும் உள்ளன.

அந்தவகையில் சுற்றுலா பயணிகளுக்கு த்ரில் அனுபவம் மற்றும் அட்வென்ச்சர் நிறைந்த இடங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மனபாட்

தமிழக மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள மனபாட் எனும் ஊரானது நீர் விளையாட்டுகளுக்கு பிரபலமான இடமாகும்.

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள் | 7 Places In Tamil Nadu With Thrilling Experience

தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்படும். அட்வென்ச்சரை விரும்பும் மக்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனைமலை

நீலகிரி மாவட்டத்தில் ஆனைமலை டாப் ஸ்லிப் பகுதி உள்ளது. இந்த பகுதியானது த்ரில் நிறைந்ததாகவும், அட்வென்ச்சர் நிறைந்ததாகவும் உள்ளது.

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள் | 7 Places In Tamil Nadu With Thrilling Experience

இங்கு நாம் ட்ரெக்கிங் செல்லவும், காட்டிற்கு உள்ளே த்ரில் பயணம், கேம்பிங் போன்றவை செல்லலாம்.

இங்கு நாம் 30 கிலோமீட்டர் தூரம் பயணத்தில் ட்ரெக்கிங் செல்லலாம். அப்போது, செல்லும் வழியில் குளங்கள் அருவிகள் போன்றவை உள்ளன.

கோவளம் கடற்கரை

சென்னை மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு இடையே ​கோவளம் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை Surfing செல்ல சிறந்த இடமாக மாறிவிட்டது.

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள் | 7 Places In Tamil Nadu With Thrilling Experience

இந்த பகுதி சென்னைக்கு அருகில் இருப்பதால் வார இறுதி நாட்களில் செல்ல ஏற்றவாறு உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டு இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொல்லி மலை

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லி மலை உள்ளது. இங்கு ட்ரெக்கிங், கிளைடிங், கேம்பிங், அட்வென்ச்சர் பயணம் போன்றவை செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள் | 7 Places In Tamil Nadu With Thrilling Experience

மேலும், காட்டிற்குள் த்ரில் பயணம் செய்யவம், அருவிகள், நீர் நிலைகளில் குளிக்கவும், காடு சம்பந்தப்பட்ட உணவுகள் சாப்பிடவும் சிறந்த இடமாகவும் உள்ளது. இது நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

ஏலகிரி

வேலூர் அருகே இந்த ஏலகிரி மலைகள் உள்ளன. இது சென்னைக்கு அருகிலும் அமைந்துள்ளது. இங்கு மலை ஏற்றம், நீர் வீழ்ச்சிகள், அருவிகள் உள்ளன. இங்கு நாம் சுற்றுலா சென்றால் நல்ல அனுபவத்தை பெறலாம்.

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள் | 7 Places In Tamil Nadu With Thrilling Experience

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை அழகிற்கு பெயர் போன இடம் என்றால் கொடைக்கானல் தான். இங்கு, ட்ரெக்கிங் செல்லவும், காடுகளை சுற்றி பார்க்கவும் முடியும். மேலும், விடுமுறை தினங்களில் சென்றால் கேம்பிங், ஹைக்கிங் செய்யலாம்.

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள் | 7 Places In Tamil Nadu With Thrilling Experience

ஊட்டி

ஊட்டி (Ooty) என்பது தமிழகத்தின் நிலப்பகுதியில் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு அழகான மலைப்பகுதி ஆகும். இப்பகுதி, அதன் பசுமையான காடுகள், மலையோரங்களுடன் கூடிய குளிர்ந்த வானிலை, மற்றும் அழகான சுற்றுலா தளங்களுக்கு பிரபலமானது.

தமிழகத்தில் த்ரில்லான அனுபவம் கொண்ட 7 இடங்கள் | 7 Places In Tamil Nadu With Thrilling Experience

இங்கு நாம் மலை ரயில் மூலம் பயணிக்கலாம். அங்கு, காடுகள், பெரிய நீர் நிலைகள், மலைகள், தேநீர் எஸ்டேட், அருவிகள் ஆகிய இடங்களுக்கு சென்று நல்ல அனுபவத்தை பெறலாம்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *