சின்ன மருமகள் சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை… மகாநதி சீரியல் நடிகையா இது?

சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் குடும்ப கதையா சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அண்ணன் தம்பி கதையா அய்யனார் துணை என ஒவ்வொரு கதைக்களத்திற்கும் விஜய் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
அப்படி படிப்பு, படிப்பின் முக்கியத்துவம், பெண் சமூகம், பெண் உரிமை போன்ற விஷயங்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் கதை தான் சின்ன மருமகள் சீரியல்.
சேதுவை திருமணம் செய்துகொண்டு கஷ்டத்தை அனுபவித்த தமிழ்ச்செல்வி இப்போது அவரிடம் சுத்தமாக பிரிந்து தனது கனவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்.
மாற்றம்
சேது தனது அப்பாவின் பேச்சை கேட்டு இப்போது தேர்தலில் போட்டியிட தமிழ்ச்செல்வி முதலில் அந்த எண்ணம் இல்லாமல் தான் இருந்தார். ஆனால் பெண்கள் அமைப்பு தமிழ்ச்செல்வியை தேடி வாய்ப்பு கொடுக்க அவர் முடியாது என கூறாமல் தேர்தலில் சேதுவிற்கு எதிராக நிற்கிறார்.
இப்போது பரபரப்பாக கதைக்களம் செல்ல தற்போது நாயகி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகாநதி சீரியல் புகழ் ஸ்வேதா சின்ன மருமகள் சீரியலில் இனி ஐஸ்வர்யாவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.






