சனாதனம் இருக்க கூடாதுனா முதலில் அவர்களை விரட்டுங்க, முடியுமா?… அர்ஜுன் பேட்டி

நடிகர் அர்ஜுன்
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் பிளாஸ்ட் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
முதல் படத்திலேயே பெயர் சொல்லும் அளவிற்கு சுவாரஸ்யமான திரைக்கதையில் நல்ல ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பேட்டி
இப்படத்திற்கான புரொமோ நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அர்ஜுன் சனாதனம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், சனாதனம் என்பது மதம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. திருடக்கூடாது, மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என பல விஷயங்களை சனாதம் போதிக்கிறது.
சிறு வயதில் நமது பெற்றோர் எவ்வளவு அழகாக நம்மை பார்த்துக்கொண்டனர், அதேபோல் பெற்றோரை அவர்களது முதிர் வயதிலும் கடவுள்போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சனாதனம் போதிக்கிறது.
சனாதனம் இருக்க கூடாது என்றால் உங்களின் பெற்றோரை வெளியே விரட்டுங்கள், அது முடியுமா? என பேசியுள்ளார்.






