கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. நடிகை த்ரிஷா வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு

த்ரிஷா
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த கருப்பு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். பொன்னியின் செல்வன், லியோ, குட் பேட் அக்லி மற்றும் கருப்பு என தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை த்ரிஷா கொடுத்து வருகிறார்.
மகிழ்ச்சியான பதிவு
இந்த நிலையில், தற்போது கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், “My magical May said,one more for the win Just God things” என கூறி கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:






