Mutiny: திரை விமர்சனம்


ஜேஸன் ஸ்டேதம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள Mutiny ஹாலிவுட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

பேங்காக்கில் பில்லியனராக இருக்கும் திபு காம்பலோ என்ற நபரிடம் பாடிகார்ட் ஆக வேலை பார்க்கிறார் கோல் ரீட் (ஜேஸன் ஸ்டேதம்).


திபுவின் நன்மதிப்பை பெறும் கோல், அவரிடம் இருந்து விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக பெறுகிறார்.

ஒருநாள் கோல் ரீட் உடன் திபு காம்பலோ காரில் செல்லும்போது சிலர் துப்பாக்கியால் சுடுகின்றனர். ரீட்டும் பதிலுக்கு சுட்டு அனைவரையும் கொல்கிறார்.

ஆனால், அந்த தாக்குதலில் திபு கொல்லப்பட, ரீட்தான் அவரை கொன்றார் என செய்தி வெளியாகிறது.


இதனால் தலைமறைவாகும் ரீட், உன் அப்பாவை நான் கொல்லவில்லை என்று காமெரோனிடம் போனில் கூறுகிறார்.


பின்னர் தன்னால் கொல்லப்பட்ட நபரின் பாஸ்போர்ட்டை வைத்து சரக்கு கப்பல் ஒன்றில் ஏறி தப்பிக்கிறார்.


அந்த கப்பலில் உள்ள கன்டெய்னர் ஒன்றில் இருந்து வரும் சத்தத்தைக் கேட்டு அதன் பூட்டை உடைக்கிறார் ரீட்.

அதனுள் குடும்பங்களாக இருக்கும் மக்களைப் பார்த்து அதிர்ச்சியடையும் ரீட், அவர்களிடம் உங்களை நான் காப்பாற்றுகிறேன் என்று உறுதியளிக்கிறார்.

கப்பலின் கேப்டன் உட்பட அடியாட்கள் அனைவரிடம் இருந்து ரீட் எப்படி அந்த மக்களை காப்பாற்றினார்? அத்துடன் திபுவின் மரணத்திற்கு அவர் பழிதீர்த்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்


2023-யில் ஜெரார்டு பட்லரை வைத்து பிளேன் என்ற பிளாக்பாஸ்டர் படத்தைக் கொடுத்த ஜீன்-ஃப்ரான்கோய்ஸ் ரிசெட்தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.


அசாதாரண சூழலில் இருந்து தப்பிக்கும் ஒரு பாடிகார்ட், உயிர் பயத்தில் தவிக்கும் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்ற லைனை வைத்து Mutiny என்ற ஆக்ஷன் திரைக்கதையை சார்லஸ் கம்மிங், ஜே.பி.டேவிஸ் வடிவமைத்துள்ளனர்.


பரபரக்கும் ஆக்ஷன் கதையை ஒரு கப்பலில் நடப்பது போல் காட்டி, சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜீன்.

ஹீரோ ஜேஸன் ஸ்டேதமிற்கே உரித்தான டிரான்ஸ்போர்ட்டர் பாணியிலான ஆக்ஷன்பேக் கதையை இயக்குநர் படமாக எடுத்துள்ளார்.


ஆனால், பார்த்துப் பழகிய வழக்கமான திரைக்கதையில்தான் படம் செல்கிறது. Wrath of Man படத்தைப் போன்ற ட்விஸ்ட்களை எல்லாம் இதில் எதிர்பார்க்க முடியாதது ஒரு ஏமாற்றம்.


மேலும் வில்லத்தனத்தை டேனிஷ் நடிகரான ரோலண்ட் மெல்லெர் உடல்மொழியிலேயே காட்டியிருந்தாலும், ஹீரோவை எதிர்கொள்வதில் புத்திசாலித்தனத்தை காட்டுவதுபோன்ற காட்சிகள் பெரிதாக இல்லை.

ஹீரோ, வில்லன் கிளாஷ் என்பது பழைய ஃபார்மேட்டிலேயே இருக்கிறது. கோல் ரீட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேஸன் ஸ்டேதம் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

வில்லனின் திட்டத்தை அறிய அவர் செய்யும் ஒரு விஷயம், சிம்பிள் ஆக இருந்தாலும் இந்த கதைக்கு இதுபோதும் என்றே தோன்றுகிறது.


ஜேஸனை எங்கு அடைத்து வைத்தாலும் அவர் எளிதாக தப்பித்து விடுகிறார். அது எப்படி என்று நாம் யோசிக்கும்போது ஒரு விஷயம் ரிவீல் ஆகும்.

அது கூஸ்பம்ப் மொமெண்ட் ஆக இருந்தாலும், ஜேஸன் ஸ்டேதமிற்கு இதெல்லாம் சாதாரணம்பா என்று நாமே கூறிவிடுவோம் என்பதால் பெரிதாக ஒர்க் ஆகவில்லை.

ஹீரோயின் அனபெல் வல்லிஸ் அழகான ஆக்ஷன் பெண்ணாக கலக்கியிருக்கிறார். கிளைமேக்சில் அவரது ஸ்டண்ட் செம.
ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாம் ஓகே ரகம். படத்தின் நீளம் 95 நிமிடங்கள் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.


க்ளாப்ஸ்

ஜேஸன் ஸ்டேதம்


சண்டைக்காட்சிகள்


பழைய பார்முலா திரைக்கதை


யூகிக்கக்கூடிய காட்சிகள்


மொத்தத்தில் இந்த Mutiny ஜேஸன் ஸ்டேதம் ரசிகர்கள் மற்றும் ஆக்ஷன் இருந்தால் போதும் என்பவர்களை மட்டுமே திருப்திப்படுத்தும்.

ரேட்டிங்: 2.5/5  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *