15 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் நிலையில், 15 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டிசி
இயக்குநராக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் டிசி. இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, வாமிகா கேபி, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
பாக்ஸ் ஆபிஸ்
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் டிசி திரைப்படம், உலகளவில் 15 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்நிலையில், 15 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் டிசி ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளது.
