வீட்டை மீட்க எப்படியோ பணம் சம்பாதித்த முத்து, ஆனால் கடைசியில்… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

வீட்டை மீட்க எப்படியோ பணம் சம்பாதித்த முத்து, ஆனால் கடைசியில்… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ


சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி Vs முத்து போட்டி தான் நடக்கிறது.

பைனாச்சியரை வைத்து விஜயாவுடன் நட்பாக பழகி எப்படியோ திருட்டுத்தனமாக வீட்டின் பத்திரத்தை வாங்கிவிட்டார் சிந்தாமணி.

அதை வைத்து அண்ணாமலை குடும்பத்தை ஆட்டி வருகிறார், வீட்டை திருப்பி தர வேண்டும் என்றால் மீனா பூ சங்கத் தலைவி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சிந்தாமணி கூற முத்து முடியாது என்றார்.

வீட்டை மீட்க எப்படியோ பணம் சம்பாதித்த முத்து, ஆனால் கடைசியில்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Next Week Promo

இதனால் கோபத்தில் வீட்டை ஏலம் விட்டே ஆக வேண்டும், வீடு என் கைக்கு வர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிவிட்டார். 

முத்துவோ, தனது பழைய முதலாளியிடம் இருக்கும் கார்களை லீசிற்கு வாங்கி அதை சரிசெய்து கார் ஓட்டி பணம் சம்பாதிக்கலாம் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் அவர் கார்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதற்குள் சிந்தாமணி வீட்டை ஏலம் விட்டுவிடுவார்.

வீட்டுப் பிரச்சனையில் இருந்து அண்ணாமலை குடும்பம் எப்படி வெளியே வரப்போகிறார்கள் என்பதே தெரியவில்லை.

 வீட்டை மீட்க எப்படியோ பணம் சம்பாதித்த முத்து, ஆனால் கடைசியில்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Next Week Promo

அடுத்த வாரம்

தற்போது அடுத்த வாரத்திற்கான புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் கட்டுக்கட்டாக பணத்தை அண்ணாமலையிடம் கொடுக்கிறார், குடும்பமே சந்தோஷப்படுகிறார்கள். அதேசமயம் ரோட்டில் பணத்துடன் ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த மீனாவிடம் இருந்து யாரோ பணத்தை எடுத்துவிடுகிறார்கள்.

அப்படி என்ன ஆனது, மீனாவிடம் இருந்து திருடியவர்கள் யார், அண்ணாமலை வீட்டை மீட்டாரா என்ற பல கேள்விகள் உள்ளன.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *