விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ‘மண்டாடி’ ப்ரோமோஷனில் பேசிய நடிகர் சூரி
விஜய் இடத்தை சினிமாவில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என சமீபத்தில் நடிகர் சூரி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூரி – மண்டாடி
விடுதலை திரைப்படத்திற்கு பின் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சூரி, கொட்டுக்காளி, கருடன், மாமன், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள மாஸ் ஆக்ஷன் திரைப்படம் மண்டாடி.
இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
சூரியின் பேச்சு
இந்நிலையில், மண்டாடி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இருக்கும் நடிகர் சூரி, சமீபத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் பேசியது, “நான் நடித்த மண்டாடி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி கோவையில் 2 நாட்கள் நடக்கிறது. இப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
பின் முதலமைச்சர் விஜய் குறித்து பேசும்போது, “தமிழக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பின், சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என கூறினார்.
