யாரையாவது காதலிக்கிறீர்களா? நடிகை நிகிலா விமல் திருமணம் பற்றி இப்படி சொல்லிட்டாரே

நடிகை நிகிலா விமல் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் தமிழிலும் இருக்கிறார்கள்.
வெற்றிவேல், கிடாரி, வாழை போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் மலையாளத்திலும் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
திருமணம்?
நிகிலா விமல் ஒரு வருடத்திற்கு முன்பே அளித்த பேட்டியில் தனக்கு திருமணம் செய்ய இன்ட்ரெஸ்ட் இல்லை என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ‘நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா’ என கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் “என் மனதில் இருப்பது ரசிகர்கள் மட்டும் தான். திருமணம் பற்றி தற்போதைக்கு நான் எதுவும் யோசிக்கவில்லை” என கூறி இருக்கிறார்.






