பேட்டிக்கு நடுவே சிகரெட் பிடித்த பிரபல சீரியல் நடிகை, ரசிகர்கள் ஷாக்
பேட்டி எடுத்து அசார்
சீரியல் நடிகைகள் தற்போது எல்லாம் சினிமா நடிகைகளை விட செம ரீச் ஆகி வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல தொகுப்பாளர் அசார் ஒரு யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
சிகரெட் பிடித்த சீரியல் நடிகை
அப்படி அவர் பிரபல சீரியல் நடிகை ஷாலினியை பேட்டி எடுத்துள்ளார்.
அப்போது அவரிடம் ‘அமர்க்களம், அஜித் அவர்களுக்கு எத்தனவாது படம்’ என கேட்க, அவர் பதில் தெரியாமல் இருக்க, உடனே அசார் டாக்சிக் படத்தில் நயன்தாரா சிகரெட் பிடிக்கும் காட்சியை ரீ-கிரியட் செய்ய வேண்டும் என சொல்ல, ஷாலினி கொஞ்சமும் யோசிக்காமல் சிகரெட் பிடித்துள்ளார்.
இதை பார்த்த எல்லோருமே செம ஷாக் ஆகி, என்ன எல்லோரும் பார்க்கும் ஒரு வீடியோவில் இப்படியெல்லாம் செய்வீர்களா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர் தைரியமாக செய்துவிட்டாரே என ஷாக்க்கும் ஆகி வருகின்றனர்.
