பாரதிராஜாவுக்கு தனது அஞ்சலியை செலுத்திய முதலமைச்சர் விஜய்.. அரசு மரியாதையுடன் இறுதி பயணம்

பாரதிராஜா
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் இன்று காலை காலமானார். இவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
முதலமைச்சர் அஞ்சலி
நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அவர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
மேலும், திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். pic.twitter.com/Nyzr0Z4c4H
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 10, 2026
முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து சூர்யா, சிவகுமார், மு.க. ஸ்டாலின், சீமான், சுகன்யா, வைரமுத்து, இளையராஜா, மாரி செல்வராஜ் என பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர்…— CMOTamilNadu (@CMOTamilnadu) June 10, 2026






