படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன்

படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன்

சின்ன மருமகள் சீரியல்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சின்ன மருமகள். ஒருவருக்கு படிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் | Chinna Marumagal Actor Naveen Admitted In Hospital

இந்த நிலையில், சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் நவீனுக்கு சீரியலின் படப்பிடிப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மருத்துவமனையில் நவீன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வெயிலில் சண்டை காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது கடுமையான வானிலை காரணமாக, நடிகர் நவீனுக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சண்டை காட்சியை முடித்த பின், அவர் வீட்டிற்கு திரும்பினார். ஆனால், மூச்சுத்திணறல் முற்றிலும் தாங்க முடியாத அளவிற்கு இருந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் | Chinna Marumagal Actor Naveen Admitted In Hospital

அங்கு அவரை மருத்துவர்கள் சோதித்து, அவருக்கு ஆக்சிஜன் உதவி அளித்துள்ளனர். பின் நடிகர் நவீனை முழுமையாக ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் தயாரிப்பு குழுவினர், முக்கியமான திருமண காட்சிகளை முடிப்பதற்காக அவரை படப்பிடிப்பிற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக அவரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் இருந்து நேராக அவர் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். உடல்நிலை சரியில்லாத போதிலும் எபிசோடுகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என தனது முழு முயற்சியையும் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் | Chinna Marumagal Actor Naveen Admitted In Hospital

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *