நீக்கப்பட்ட காட்சிகளுடன் சூர்யாவின் கருப்பு ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா?

கருப்பு படம்
‘முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றியடைந்தால் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதேசமயம், படம் கொஞ்சம் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்றாலும், நஷ்டத்தை சந்தித்தாலும் ரசிகர்கள் அப்படக்குழுவிற்கு கை கொடுப்பார்கள்.
கடைசி வெளியான படங்களில் பெரிய வெற்றியை சந்திக்காத சூர்யாவிற்கு தற்போது கருப்பு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா முக்கிய ஜோடியாக நடிக்க இப்படம் கடந்த மே 15ம் தேதி வெளியாகி இருந்தது. ஆரம்பத்தில் சில நிதி சிக்கல்களால் படத்தில் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டாலும் தற்போது தாறுமாறு வரவேற்பு பெற்று வருகிறது.
சமூக நீதி, சட்ட அமைப்பின் குறைகள் மற்றும் கருப்பசாமி வழிபாட்டை மையமாகக் கொண்ட கருப்பு படத்தின் கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓடிடி ரிலீஸ்
தமிழகத்தில் மட்டுமே ரூ. 80 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் மொத்தமாக ரூ. 165 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கருப்பு படம் ஜுன் மாதம் 2வது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






