நடிகை மீனாவின் மகள் நைனிகாவா இது! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..

மீனாவின் மகள் நைனிகா
நடிகை மீனா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரை தொடர்ந்து இவருடைய மகள் நைனிகாவும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்தார்.
முதல் திரைப்படமே தளபதி விஜய்யுடன் தெறி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்து இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தை தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தில் நைனிகா நடித்திருந்தார்.
ஆனால், இதன்பின் வேறு எந்த திரைப்படங்களிலும் நைனிகா நடிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் விரைவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நைனிகாவா இது
இந்த நிலையில், நடிகை நைனிகா தனது அம்மா மீனாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆளே மாறி, நன்றாக வளர்ந்திருக்கும் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..