நடிகர் விஜய்க்கு எமோஷ்னலான பதிவுடன் நன்றி சொன்ன இசையமைப்பாளர் அனிருத்…

நடிகர் விஜய்
தமிழ் சினிமா இனிமேல் ஒரு சிறந்த நடிகரை மிஸ் செய்யப்போகிறது. 1984ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.
அதன்பின் 5 படங்கள் சிறுவனாகவே நடிக்க 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக தனது முதல் படத்தில் நடித்துள்ளார், தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு ஆரம்பத்தில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை, மாறாக மோசமான விமர்சனங்கள் தான் வந்தது.
ஆனால் விடா முயற்சியால் கடுமையாக உழைத்து சிறந்த படங்கள் நடித்து நிறைய சாதனைகள் படைத்துள்ளார். இப்போது இவர் இல்லாத சினிமா கொஞ்சம் வருத்தம் என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு மக்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
அனிருத்
விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசிப்படமான ஜனநாயகன் கடந்த ஜுலை 23ம் தேதி வெளியாகிவிட்டது.
படம் ஒருபக்கம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத், விஜய்யுடன் பயணித்தது குறித்து அழகான பதிவு போட்டுள்ளார்.
ஜனநாயகன், லியோ, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் கத்தி என உங்களுடன் பயணித்தது அற்புதமான, உணர்வுபூர்வமான அனுபவம்.
அளவற்ற நம்பிக்கைக்கும், வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் தருணங்களுக்கும் நன்றி, இசை என்றும் வாழும் என விஜய்க்கு அனிருத் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.






