டாக்சிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா


நேற்று வெளியான டாக்சிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

நடிகர் யாஷ் இன்று பான்-இந்திய ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். கேஜிஎப் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு பின், 4 ஆண்டுகளுக்கு பிறகு யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் யாஷுடன் இணைந்து கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான டாக்சிக் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், டாக்சிக் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *