ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ..

Mamitha baiju in jai hanuman movie: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மமிதா பைஜூ ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மமிதா பைஜூ

பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றவர் மமிதா பைஜூ. தமிழில் ரெபெல் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து Dude, கர, ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.

ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ.. காந்தாரா ரிஷப் ஷெட்டியுடன் கூட்டணி | Mamitha Baiju In Jai Hanuman Movie

ஜெய் அனுமான்

காந்தாரா படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. இவர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ஜெய் அனுமான். இப்படத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ.. காந்தாரா ரிஷப் ஷெட்டியுடன் கூட்டணி | Mamitha Baiju In Jai Hanuman Movie

தெலுங்கில் மமிதா பைஜூ

இந்த நிலையில், ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நேரடியாக தெலுங்கு திரையுலகில் மமிதா காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஜெய் அனுமான் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ.. காந்தாரா ரிஷப் ஷெட்டியுடன் கூட்டணி | Mamitha Baiju In Jai Hanuman Movie

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *