ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரியாகும் பிரபல நடிகை… யாரு பாருங்க

கார்த்திகை தீபம்
செம்பருத்தி சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்றால் அது கார்த்திகை தீபம் தான்.
கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகா ஜோடியாக நடிக்க முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வெற்றிகரமாக ஓடிய முதல் பாகம் முடிந்த வேகத்தில் அடுத்த சீசன் தொடங்க இப்போது வரை 800க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
நியூ என்ட்ரி
2வது பாகத்தில் கதாநாயகனை தாண்டி எல்லா கதாபாத்திர மாற்றமும் நடந்தது.
கதையும் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் கார்த்திகை தீபம் சீரியலில் புதிய என்ட்ரியாக நடிகை கீர்த்திகா வர உள்ளாராம். இவர் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.