சிந்து பைரவி சீரியலில் சிவா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அய்யனார் துணை சீரியல் நடிகரா?

அய்யனார் துணை
ரசிகர்கள் கொண்டாடும் டாப் தொடராக தமிழ் சின்னத்திரையில் வலம் வரும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை.
இப்போது கதையில் சேரன்-சந்தா காதல் கதை தான் பரபரப்பாக செல்கிறது. இருவரும் காதலித்தாலும் இப்போது நான் திருமணம் செய்தால் நிலா வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவார் என கூறி சேரன் கூற சந்தாவும் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் இப்போது சந்தாவின் உறவினர்கள் அவரை தேடி சென்னைக்கு வர அந்த நேரத்தில் பிரச்சனையை தெரிந்துகொண்ட வானதி, சந்தாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.
சேரன் திருமணம் நடக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தள வீடியோவும் வெளியாகி இருந்தது.
சிந்து பைரவி
தற்போது விஜய் டிவியில் நிறைய இளம் கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வருகிறது சிந்து பைரவி. இந்த சீரியலில் இப்போது சிவாவுடன் சேர துடிக்கும் சிந்துவின் போராட்டமாக கதை நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சிவா கதாபாத்திரம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது சிவா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அய்யனார் துணை சீரியலில் சேரனாக நடிக்கும் முன்னா தானாம்.
பின் சில காரணங்களால் அவர் அய்யனார் துணை சீரியல் செல்ல அந்த வாய்ப்பு திரவியமிற்கு சென்றுள்ளது.






