கருப்பு படத்தை காப்பி அடிச்சேனா? 90ஸ் ‘விடாது கருப்பு’ தெரியுமா.. நடிகர் ஸ்ரீ பதிலடி

கருப்பு படத்தை காப்பி அடிச்சேனா? 90ஸ் ‘விடாது கருப்பு’ தெரியுமா.. நடிகர் ஸ்ரீ பதிலடி


சின்னத்திரை தொடர்களில் வரும் காட்சிகள் படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக அடிக்கடி விமர்சனம் வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அப்படி சமீபத்தில் கருப்பு படத்தை காப்பி அடித்ததாக நடிகர் ஸ்ரீகுமார் மீது நெட்டிசன்கள் விமர்சனம் வைத்தனர்.

கருப்பு படத்தை காப்பி அடிச்சேனா? 90ஸ் ‘விடாது கருப்பு’ தெரியுமா.. நடிகர் ஸ்ரீ பதிலடி | Sree Ganesh Reply To Trolls On Copying Karuppu

பதிலடி

தன் மீது வந்த ட்ரோல்களுக்கு நடிகர் ஸ்ரீகுமார் தற்போது பதில் அளித்திருக்கிறார். “கருப்பு படம் வந்ததும் அதை பார்த்து காப்பி அடித்ததாக சொல்கிறார்கள். அப்படி காப்பி அடித்தால் என்ன இப்போ. எல்லாம் இன்ஸ்பிரேஷன் தான். சீரியல் என்றால் கேவலமாக பார்க்கிறார்கள்.”

“வெட்கமே இல்லையா என கேட்கிறார்கள். இதில் என்ன தப்பு இருக்கு. கொஞ்சம் கெட்ட வார்த்தை இல்லாமல் கமெண்ட் பண்ணுங்க”.

“ஒரு சீரியலை நம்பி 100 குடுப்பம் இருக்கு. விடாது கருப்பு-னு 90ஸ்-லயே வந்துடுச்சு இதெல்லாம்.”

”சினிமா, சீரியல், நாடகம், தெருக்கூத்து போன்றவற்றுக்கு வித்தியாசம் இல்லை. எல்லாரும் ஒரு ஜான் வயிற்றுக்கு தான் வேலை பார்க்கிறார்கள்”.

”மற்றவர்களுக்கு இது எண்டெர்டெயின்மெண்ட். எங்களுக்கு இது தான் சோறு” என ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *