கமலுடன் இணைந்து நடிக்கிறேன்? ஆனால்.. ரஜினிகாந்த் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினி – கமல்
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எவர் கிறீன் கூட்டணி ரஜினி – கமல். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட 10 திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து படங்கள் நடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு பின் பிரிந்து நடிக்க முடிவு செய்தனர். அதன்படி 46 ஆண்டுகளாக பிரிந்து நடித்து வரும் ரஜினி – கமல் தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளனர்.
ராஜ் கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்தது. இதனை சைமா விருது விழாவில் கமல் உறுதி செய்தார். ஆனால், இயக்குநர் யார் என்று அவர் கூறவில்லை.
ரஜினி கொடுத்த அப்டேட்
இந்த நிலையில், இன்று காலை ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா செல்ல விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் இப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரஜினி, “அடுத்து ராஜ்கமல் & ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. நானும், கமலும் இணைந்து நடிக்க வேண்டுமென ஆசை. அதற்கு சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என கூறியுள்ளார்.