ஓடிடியில் வெளிவந்த பிறகும் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஓடிடியில் வெளிவந்த பிறகும் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


கருப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த மே மாதம் வெளிவந்த திரைப்படம் கருப்பு.

ஓடிடியில் வெளிவந்த பிறகும் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Karuppu Movie Box Office Report



2026ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப் 10 திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வரும் கருப்பு,  ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி, ரூ. 300 கோடி என தொடர்ந்து ஒவ்வொரு மைல்கல்லாக கடந்து சாதனை படைத்தது. திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் கருப்பு நேற்று ஓடிடியில் வெளிவந்து அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஓடிடியில் வெளிவந்த பிறகும் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Karuppu Movie Box Office Report

என்னதான் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் கூட, திரையரங்குகள் மூலம் வசூலை இன்னும் அள்ளிவருகிறது. இந்த நிலையில், 29 நாட்களில் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 332 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *