ஆனந்திக்கு கட்டாய திருமணம்.. என்ட்ரி கொடுத்த கயல்! சன் டிவி கயல் அடுத்த வார ப்ரோமோ

கயல் சீரியலில் ஆனந்திக்கு கட்டாய திருமணம் செய்ய நடக்கும் முயற்சியை கயல் தடுத்து நிறுத்துவாரா? அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆனந்தியை கடத்தி கொண்டு செல்லும் மீனாட்சி அம்மாவுக்கு கணவரிடம் இருந்து போன் வருகிறது. பையன் கண் விழித்துவிட்டான், உடனே ஹாஸ்பிடல் வந்தால் ஆனந்தி உடன் திருமணம் இங்கேயே செய்து விடலாம் என சொல்கிறார்.
அதை கேட்டு ஆனந்தியை அங்கே கூட்டி செல்கிறார். ஆனால் அங்கே கயலின் தோழி நர்ஸ் ஆக இருக்கிறார். உடனே போன் செய்து கயலுக்கு தகவல் கொடுக்கிறார்.
தடுப்பாரா கயல்?
ஆனந்திக்கு கட்டாய தாலி கட்ட முயற்சிகள் நடக்கிறது. கயல் அந்த நேரத்தில் அங்கே வந்து சேர்கிறார்.
அவர் ஆனந்தியை காப்பாற்றுவாரா? ப்ரோமோவை பாருங்க.






