அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் திருமணம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் திருமணம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்


அய்யனார் துணை

சின்னத்திரையில் அனைவரின் மனதையும் கவர்ந்த சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. அதுவும் விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆம், TRP ரேட்டிங்கில் அய்யனார் துணை சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இந்த சீரியலில் தற்போது, நிலாவை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என முடிவு செய்த சோழன், தனி குடித்தனம் செல்லலாம் என முடிவு எடுத்தார். ஆனால், இது நிலாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதனால், வாடகை வீட்டிற்கு தந்தை அட்வான்ஸ் பணத்தை மீண்டும் வாங்கி வருமாறு கூறினார். பணத்தை வாங்குவதற்காக ஹவுஸ் ஓனர் காலில் விழுந்தார் சோழன். இதை அறிந்து நிலா மிகவும் கஷ்டப்பட்டார்.

ஒருவழியாக எப்படியோ அந்த பணத்தை சோழன் திரும்ப வாங்கி, நீண்ட நாட்களாக பல்லவன் கேட்டுக்கொண்டிருந்த புதிய டிவியை வாங்கிவிட்டார். இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

திருமணம்

சோழன் – நிலாவை தொடர்ந்து அடுத்ததாக சேரன் – சந்தா திருமணத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சந்தாவை சேரனுக்கு திருமணம் செய்து தரமாட்டேன் என அவரது தந்தை கூறிவிட்டார். இந்த பிரச்சனையை சேரன் எப்படி சமாளிக்கப் போகிறார் என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் சர்ப்ரைஸ் தரும்படி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அய்யனார் துணை சீரியலில் அடுத்ததாக நடக்கவிருப்பது, சேரன் – சந்தா திருமண நிகழ்வு தானாம். அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் சேரன் – சந்தா திருமண ப்ரோமோ வீடியோ வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *