ரசிகர் பாடிய 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' பாடலை கேட்டு ரசித்து பாராட்டிய அஜித்

ரசிகர் பாடிய  'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' பாடலை கேட்டு ரசித்து பாராட்டிய அஜித்


துபாய்,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான சவதீகா மற்றும் பத்திக்கிச்சி ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், துபாயில் நடிகர் அஜித்திடம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடலை அசத்தலாக பாடிய ரசிகரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர் அழகாக பாடுவதை புன்னகையுடன் வியந்து கேட்டு ரசித்த அஜித் அவரை பாராட்டினார். பின்னர் ரசிகரின் பெயரை கேட்க அவர் அஜித் என கூற, இருவரும் சிரித்தவாறு கட்டியணைத்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித் நடிப்பில் 2000ல் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் ‘அஜித் குமார் ரேசிங் அணி’ மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, போர்ச்சுகலில் நடைபெற்ற தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *