Bhogi (தெலுங்கு): திரை விமர்சனம்


ஷர்வானந்த், அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாதி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள போகி திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க.

Bhogi (தெலுங்கு): திரை விமர்சனம் | Bhogi Movie Review

கதைக்களம்




1960களில் பொக்குலகுட்டா என்ற ஊர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட, அங்கு மதிப்புமிக்க செல்வாக்கான நபரான இருக்கும் பட்டேல் (ஷரத் லோகிதஷ்வா) ஊர் நன்மைக்காக ஒருவித சடங்கினை செய்கிறார்.


அதே ஊரில் தனது மாமா (லால்) உடன் கொல்லுப்பட்டறை வேலை பார்க்கிறார் கங்கா.

பெற்றோர் இல்லாத சூழலில் தனது 5 தங்கைகளையும் கங்கா பாசமாக வளர்க்கிறார்.


அவருக்கு பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சுலோச்சனாவும், கங்காவும் காதலிக்கின்றனர். என்றாலும் மூத்த தங்கைக்கு திருமணம் செய்து வைக்கும் முனைப்பில் கங்கா இருக்கிறார்.


இந்த சூழலில் சிறுவயது பிள்ளைகள் காணாமல்போனதாக பழங்குடியின மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வர, SI நாக்ரே (ரோஹித் பதாக்) விரட்டியடித்து விடுகிறார்.

Bhogi (தெலுங்கு): திரை விமர்சனம் | Bhogi Movie Review

ஆனால், சடங்கிற்காக அந்த பிள்ளைகள் கடத்தப்படுகிறார்கள். அதேபோல் பிளேக் நோய் பரவலைத் தடுக்க ஊர்மக்கள் பட்டேலிடம் மன்றாடுகிறார்கள்.


அதற்கு மீண்டும் சடங்கு செய்ய வேண்டுமென பூசாரி அவினாஷ் கூற, பெண் பிள்ளைகளை கடத்த ஊர் இளைஞர்கள் கிளம்புகிறார்கள்.


அவர்களுடன் இம்முறை கங்காவும் செல்ல, அந்த பிள்ளைகள் எல்லாம் நரபலி கொடுக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.




ஒருவழியாக அந்த பிள்ளைகளை அவர் காப்பாற்றிவிட, கோபத்தின் உச்சிக்கு செல்லும் பட்டேல் கங்காவின் தங்கைகளை பலி கொடுக்க முடிவெடுக்கிறார்.


கங்கா தனது தங்கைகளை காப்பாற்றினாரா? பட்டேலின் சுயரூபம் ஊர்மக்களுக்கு தெரிந்ததா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்




ரச்சா, பெங்கால் டைகர் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த சம்பத் நந்தி, சிறிய இடைவெளிக்கு பிறகு எழுதி இயக்கியிருக்கும் படம் இது.


சாக்லேட் பாய் ஷர்வானந்த்தின் லுக்கினை மாற்றி வெளியிடப்பட்ட போஸ்டர்கள், டீசர் எல்லாம் இப்படத்திற்கு எதிர்பார்ப்பை கொடுத்தது.



ஆனால் டாக்சிக், பாரடைஸ் படங்களை என்ன செய்தனவோ அதைவிட மோசமாக நம்மை சோதித்துவிட்டது இந்த போகி.


மூடநம்பிக்கை தவறு என்கிற நல்ல விஷயத்தை கதைக்கருவாக எடுத்திருந்தாலும், அதனை திரைக்கதையாக கொண்டுசெல்வதில் சறுக்கிவிட்டார் இயக்குநர்.

Bhogi (தெலுங்கு): திரை விமர்சனம் | Bhogi Movie Review

கனெக்ட் ஆகாத எமோஷனல் காட்சிகள், கதைக்கு சம்பந்தமில்லாத கேரக்டர்கள், அப்பட்டமாக தெரியும் சினிமாடிக் லிபர்டி என பல சொதப்பல்கள்.


போதாக்குறைக்கு பின்னணி இசை என்ற பெயரில் பீம்ஸ் சிசிரோலியோ பலரை ஆ..ஓ.. என கத்த வைத்து நம் காதுகளை பதம் பார்த்துவிடுகிறார்.




ஷர்வானந்த் நடிப்பினை வெளிப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டாலும், வலுவில்லாத காட்சிகள் சோதிக்கின்றன.


இயல்பாக நடிக்கிறேன் என அனுபமா ஒரு காட்சியில் நடிக்கும் காட்சியை பெரிய திரையில் பார்க்க முடியவில்லை. விலைமாது கேரக்டரில் வரும் டிம்பிள் ஏன், எதற்கு? என்றே தெரியவில்லை.




ஹீரோயின் மானத்தை காப்பாற்ற மட்டும் பயன்பட்டிருக்கிறார். வில்லன்கள் ஷரத், ரோஹித் பதாக், அவினாஷ் ஆகியோரின் நடிப்பு ஓகே என்றாலும், மோசமான மேக்கிங்கினால் காட்சிகளை சகிக்க முடியவில்லை.


இருப்பதிலேயே லால் கதாபாத்திரம்தான் பரிதாபத்திற்குரியது. அவ்வளவு பெரிய நடிகரை வீணடித்திருக்கிறார்கள்.

Bhogi (தெலுங்கு): திரை விமர்சனம் | Bhogi Movie Review

ஆளவிடுங்க சாமி என ஆடியன்ஸ் கிளம்பும்போது ஒரு ட்விஸ்ட்டை ரிவியல் செய்கிறார் இயக்குநர். இதெல்லாம் 80-களில் வந்த படங்களிலேயே பார்த்தாச்சுபா என்பதுபோல்தான் இருந்தது.


ஆர்ட் டிபார்ட்மென்ட் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது பல காட்சிகளில் தெரிகிறது.

மற்ற டெக்னீஷியன்களை சரியாக இயக்குநர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். சண்டைக்காட்சிகள் கூட சுமார் ரகம்தான்; ஆனால் இரத்தம் தெறிக்கிறது, தலைகள் பறக்கின்றன.

க்ளாப்ஸ்




  • ஆர்ட் டிபார்ட்மென்ட்



  • சொல்ல நினைத்த கருத்து




பல்ப்ஸ்




  • மோசமான திரைக்கதை



  • இரைச்சலான பின்னணி இசை



  • பார்த்து பழகிய மற்றும் லாஜிக் இல்லாத காட்சிகள்



  • பொறுமையை சோதிக்கும் படத்தின் நீளம்




மொத்தத்தில் இந்த போகி மூட நம்பிக்கையை கொளுத்த நினைத்து படம் பார்க்க வந்தவர்களை கொளுத்திவிட்டது.

Bhogi (தெலுங்கு): திரை விமர்சனம் | Bhogi Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *