அஜித், நயன்தாரா தங்கள் தலையில் கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள்- திருப்பூர் சுப்ரமணியம்
Tirupur subramaniam about ajith, nayanthara: அஜித் மற்றும் நயன்தாரா குறித்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது; அவர் என்ன கூறினார் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
அஜித் – நயன்தாரா
அஜித், நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். அதிலும் அஜித் இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போது இவர் படம் வரும் என தவம் இருக்கிறார்கள்.
அதே போல் நயன்தாரா அவர்களும் ரூ 10 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருபவர். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு ப்ரோமோஷன் வருவதே இல்லை.
திருப்பூர் சுப்ரமணியம் ஓபன் டாக்
இதுக்குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், “அஜித்- நயன்தாரா இருவரும் எந்த ஒரு ப்ரோமோஷனும் வருவதில்லை, இப்படி இருப்பது அவர்கள் தலையில் ஏதோ கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள், இப்படியே இருந்தால் காணாமல் போவார்கள்” என கூறியுள்ளார்.
