தன்மானம் இழந்து இந்த பிக்பாஸ் 10 நிகழ்ச்சி வேண்டுமா?… விஜய் சேதுபதியை கேட்கும் பிரபலம்


பிக்பாஸ் 10

தமிழ் சினிமாவில் சின்ன இடத்தில் இருந்து பெரிய இடத்திற்கு கடின உழைப்பால் வளர்ந்தவர்கள் பலர் உள்ளனர்.

அப்படி சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. நாயகனாக நடிப்பதை தாண்டி மற்ற நடிகர்களின் படங்களிலும் சிறப்பு வேடத்தில் நடித்து வந்தார்.

தன்மானம் இழந்து இந்த பிக்பாஸ் 10 நிகழ்ச்சி வேண்டுமா?... விஜய் சேதுபதியை கேட்கும் பிரபலம் | James Vasanthan About Vijay Sethupathi Bb10 Show

ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் விஜய் சேதுபதி தனது தன்மானத்தை இழந்து இந்த நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டுமா என ஒரு பிரபலம் கேட்டுள்ளார்.


யார் அவர்


விஜய் சேதுபதி படங்களில் நடிப்பதை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 10 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடைசியாக நடந்த எபிசோடில், போட்டியாளர் ஜேசன் கொஞ்சம் மரியாதை குறைவாக நடந்துகொண்டார், அவரின் செய்கைக்கு விஜய் சேதுபதி அப்போதே பதிலடி கொடுத்தார்.

தன்மானம் இழந்து இந்த பிக்பாஸ் 10 நிகழ்ச்சி வேண்டுமா?... விஜய் சேதுபதியை கேட்கும் பிரபலம் | James Vasanthan About Vijay Sethupathi Bb10 Show

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கொஞ்சம் கூட பண்பும் ஒழுக்கமற்ற உங்களைவிடப் பல ஆண்டுகள் வயதில் குறைந்த ஒரு போட்டியாளன் உங்கள் மாண்பைத் தகர்க்கிற எல்லையைத் தாண்டிய பிறகும் நீங்கள் அவனை சகித்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் தொடரவேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதாக நானும், இந்நிகழ்ச்சி ஆதரவாளர்களும் நினைக்கவில்லை.

தன்மானத்தை இழந்து இந்த நிகழ்ச்சி வேண்டுமா, சிந்தித்துச் செயல்படுவீர்கள் என நம்புகிறோம் என்றிருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *