தனுஷின் அடுத்த பட ரிலீஸ் ஓம் ப்ரீ புக்கிங் எவ்வளவு தெரியுமா?
ஓம் படம்
அமரன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் கவனம் பெற்றவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
இவர் இப்போது தனுஷின் 55வது படமான ஓம் படத்தை இயக்க வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகளுடன் இப்படம் தயாராகி இருக்கிறது.
இதில் தனுஷுடன் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் மியூசிக், இதில் இடம்பெற்ற அலாக்கா லோவா, வீழா வீரா, செஞ்சுடரே போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
ப்ரீ புக்கிங்
மாஸாக தயாராகியுள்ள இப்படம் ஆரம்பத்தில் அக்டோபர் 16 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, பின் நவம்பர் 20ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
சமீபத்தில் பட டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்ற நிலையில் ப்ரீ புக்கிங்கும் துவங்கிவிட்டது.
இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 75 லட்சம் வரை படம் கலெக்ஷன் செய்துள்ளதாம்.
