டேர் டெவில் திரைப்படத்தில் இணையும் கன்னட சூப்பர்ஸ்டார்


Ajith kumar dare devil update: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டேர் டெவில். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இப்படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.


டேர் டெவில்


குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதிக் மற்றும் அஜித் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் டேர் டெவில். இப்படத்தை அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி அஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மேலும், கடந்த 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

டேர் டெவில் திரைப்படத்தில் இணையும் கன்னட சூப்பர்ஸ்டார் | Shiva Rajkumar Join Hands With Ajith Kumar

டேர் டெவில் திரைப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும், பார்த்திபன், பிரபு ஆகிய மூத்த நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

டேர் டெவில் திரைப்படத்தில் இணையும் கன்னட சூப்பர்ஸ்டார் | Shiva Rajkumar Join Hands With Ajith Kumar



கன்னட சூப்பர்ஸ்டார்



இந்த நிலையில், டேர் டெவில் திரைப்படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்துகொள்வாராம். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

டேர் டெவில் திரைப்படத்தில் இணையும் கன்னட சூப்பர்ஸ்டார் | Shiva Rajkumar Join Hands With Ajith Kumar



இதற்கு முன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மோகன்லாலை படக்குழு அணுகியது. ஆனால், சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக, தற்போது அந்த கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார் என திரை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *