இந்தியாவில் முதல் நாள் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்
Scene movie india box office: சூர்யா நடிப்பில் நேற்று வெளியான சீன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது என்கிற தகவலை பார்த்தோம். அதை தொடர்ந்து, தற்போது இப்படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து, இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
சூர்யா 2026
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை நாம் அறிவோம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரெட்ரோ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். ஆனால், கண்டிப்பாக சூர்யாவின் கம்பேக் செம மாஸாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் உலகளவில் பிளாக்பஸ்டர் வெற்றியை சந்தித்தது.
கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஆனால், ஓடிடிக்கு வந்தபின் தமிழ்நாட்டில் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன்
தொடர்ந்து இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா ஹாட்ரிக் அடிப்பாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளி பரிசாக வந்தது சீன். இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஆனந்த்ராஜ், லால், ராஜப்ரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நேற்று வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய பாக்ஸ் ஆபிஸ் விவரம்
சீன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 36+ கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், இந்திய பாக்ஸ் ஆபிஸில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா & தெலுங்கானா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் மற்ற இடங்களில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியல் இதோ:
-
தமிழ்நாடு – ரூ. 11+ கோடி - கேரளா – ரூ. 6 கோடி
- கர்நாடகா – ரூ. 2+ கோடி
-
ஆந்திரா மற்றும் தெலுங்கானா – ரூ. 3.5 கோடி - இந்தியாவின் மற்ற இடங்களில் – ரூ. 25 லட்சம்
மொத்தம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் சீன் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளது.
பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிசில் செய்துள்ள முதல் நாள் வசூல் குறித்து இதில் பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
