மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல்


Mookuthi amman 2 First day box office: நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது: அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


மூக்குத்தி அம்மன் 2


மூக்குத்தி அம்மன் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம். நேரடியாக ஓடிடியில் வெளிவந்தாலும், அதற்கென்று தனி வரவேற்பு கிடைத்து வெற்றிபெற்றது. இதன்பின், மூக்குத்தி அம்மன் 2 எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில், வேல்ஸ் நிறுவனம் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கவில்லை, இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார் என்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Worldwide First Day Box Office



முதல் முறையாக சுந்தர் சி – நயன்தாரா கூட்டணியில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவானது. இப்படத்தில் ஊர்வசி, ரெஜினா, துனியா விஜய், யோகி பாபு, குஷ்பூ, சினேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆனால், இப்படத்தில் உள்ள CG வேலைப்பாட்டிற்கு ரசிகர்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள்.


பாக்ஸ் ஆபிஸ் வசூல்


ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், தீபாவளி பண்டிகை சிறப்பாக வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உலகளவில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Worldwide First Day Box Office



இந்த நிலையில், நயன்தாராவின் நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முதல் நாளே உலகளவில் ரூ. 4 – 5 கோடி வசூல் செய்துள்ளது. இது சற்று குறைவான முதல் நாள் வசூல் என்றாலும், போகப்போக எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Worldwide First Day Box Office



பொறுப்பு துறப்பு:
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இதில் பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *