பிரபல இயக்குனருக்கு ஐபோன் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்… யாருக்கு தெரியுமா?
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் கடைசியாக வெளியான திரைப்படம் பராசக்தி.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன், ஸ்ரீலீலா, அதர்வா, ஜெயம் ரவி என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன, வசூலும் ஓரளவிற்கு வந்தது.
இப்படத்திற்கு பிறகு சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசன் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
ஐபோன்
சேயோன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 27வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் ராம்குமாருக்கு சிவகார்த்திகேயன் ஒரு பரிசு கொடுத்துள்ளார்.
அதாவது ராம்குமாருக்கு சிவகார்த்திகேயன் ஒரு ஐபோன் பரிசாக கொடுத்துள்ளாராம், அதை புகைப்படம் எடுத்து இயக்குனரே தனது இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.
