ராமாயணா படத்தில் நடிக்க சாய் பல்லவி வாங்கிய சம்பளம்


Sai pallavi ramayana movie salary: ரூ. 4000 கோடியில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ராமாயணா படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


ராமாயணா


இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராமாயணா. இதுவரை ராமாயணத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், இப்படத்தின் மீது தனி எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

Ramayana: ராமாயணா படத்தில் நடிக்க சாய் பல்லவி வாங்கிய சம்பளம் | Sai Pallavi Ramayana Movie Salary

காரணம், ராமாயணா பார்ட் 1 மற்றும் ராமாயணா பார்ட் 2 என இரண்டு பாகங்களாக ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும், ராவணனாக யஷ் நடித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Ramayana: ராமாயணா படத்தில் நடிக்க சாய் பல்லவி வாங்கிய சம்பளம் | Sai Pallavi Ramayana Movie Salary

சமீபத்தில் ராமாயணா பிரீமியர் வெளிநாட்டில் நடந்தது. இதில் படம் பார்த்தவர்கள் பலரும், யஷ் நடிப்பை புகழ்ந்து பேசியுள்ளனர். இதனால், வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் ராமாயணா திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



சம்பளம்



பிரம்மாண்டமாக எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளின் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகும். அந்த வகையில், ராமாயணா திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.

Ramayana: ராமாயணா படத்தில் நடிக்க சாய் பல்லவி வாங்கிய சம்பளம் | Sai Pallavi Ramayana Movie Salary

ராமாயணா பார்ட் 1 மற்றும் ராமாயணா பார்ட் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடிக்க, நடிகை சாய் பல்லவி ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *