கமல் ஸ்ரீதேவி படத்தில் இணையும் பிரபு தேவா, சிம்ரன்.. அறிவிப்பு வீடியோ


Kamal Sridevi movie Announcement: பிரபு தேவா மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் கமல் ஸ்ரீதேவி திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

கமல் ஸ்ரீதேவி

டைம், VIP போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த பிரபு தேவா – சிம்ரன் தற்போது பல ஆண்டுகளுக்கு பின் ‘கமல் ஸ்ரீதேவி’ எனும் தலைப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பஸ்லியான் இணைந்து தயாரிக்க, இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டராபட்டு இயக்குகிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

டூரிஸ்ட் பேமிலி, ஆவேசம், மண்டாடி போன்ற திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த மிதுன் ஜெய்சங்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், நடிகை ஸ்மேஹா மணிமேகலை இப்படத்தில் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ஆபிஸ் வெப் சீரிஸ், தெலுங்கில் வெளியான தீவானா திரைப்படம் ஆகியவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

அறிவிப்பு வீடியோ இதோ:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *