பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேறிய குமரன் தனது அப்பாவுடன் என்ன செய்கிறார் பாருங்க… வீடியோ இதோ
பிக்பாஸ் 10
கடந்த செப்டம்பர் 6ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது பிக்பாஸ் 10வது சீசன்.
மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இந்நிகழ்ச்சியில் அன்றாடம் நாம் சீரியல்களில் பார்த்து ரசித்த சின்னத்திரை கலைஞர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
திடீரென எலிமினேஷன், அதிரடி வைல்ட் கார்டு என்ட்ரி, சண்டை, கோபம், விளையாட்டு, கொஞ்சம் மகிழ்ச்சி என எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
குமரன்
இந்த சீசனில் இவர் கண்டிப்பாக வெற்றிப்பெறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த போட்டியாளர் தான் குமரன்.
இவர் கடைசி வரை வருவார் என எதிர்ப்பார்த்தால் திடீரென ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். காரணம் அவரது அப்பா மறதியால் அவதிப்பட்டு வருகிறாராம்,
தனது அக்காவை கூட நியாபகம் இல்லை, தன்னை மட்டுமே அவருக்கு தெரிகிறது. இப்போது அவர் என்னை மறந்துவிடுவாரோ என பயமாக இருப்பதாக கூறி வெளியேறினார். தற்போது குமரன் தனது அப்பாவுடன் நேரம் செலவிட்டு வருகிறார், சமையல் அறையில் அப்பாவுடன் நேர்ந்து சமைக்கும் அழகான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதோ வீடியோ,
