சேனாபதி Is Back.. அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது..


Indian 3 movie update: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.


இந்தியன் 2



ஷங்கர் – கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 வெளியானது.

சேனாபதி Is Back.. அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது.. | Indian 3 Movie Update

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 2024-ஆம் ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் கூட, இந்தியன் 3 திரைப்படத்திக்கென்று தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆகையால் இந்தியன் 3 அப்டேட் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.



இந்தியன் 3



இந்த நிலையில், லைகா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படத்திற்கான அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. “Senapathy is back with zero tolerance. The resurgence begins in Indian 3 War Mode” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேனாபதி Is Back.. அனைவரும் காத்திருந்த இந்தியன் 3 படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது.. | Indian 3 Movie Update



இந்தியன் 3 அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தையாவது சொதப்பாமல் மக்களுக்கு பிடித்தவாறு எடுங்கள் என பலரும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *