ஆபத்தில் சிக்கப்போன ரோஹினி, கைகொடுத்து காப்பாற்றிய விஜயா… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் மக்கள் கொண்டாடும் ஜோடியாக இருக்கும் மீனா-முத்துவிற்கு மட்டும் அடுத்தடுத்த பிரச்சனைகளாக வருகிறது.
ரேகாவை சத்யா திருமணம் செய்ததில் இருந்து சிந்தாமணி சூழ்ச்சிகளாக செய்து முத்துவிற்கும்-சத்யாவிற்கு மனக்கசப்பு ஏற்பட செய்துவிட்டார். சத்யா இப்போது சுத்தமாக மீனா மற்றும் முத்து மீது மரியாதை இல்லாமல் இருக்கிறார்.
அவரின் செயலால் வருத்தத்தில் இருந்த முத்துவின் மனம் மாற அண்ணாமலை என் அம்மாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்வோம் என்கிறார். விஜயாவும் ரொம்ப நாள் எனது அம்மாவிடம் உண்மையை சொல்லாமல் இருக்க மாட்டாள், எனவே ஊருக்கு கொஞ்ச நாள் செல்வோம் என்கிறார்.
இதனால் அண்ணாமலை, அவரது அம்மா, முத்து, மீனா அனைவரும் இன்றைய எபிசோடில் ஊருக்கு செல்கிறார்கள்.
புரொமோ
மாமியார் ஊருக்கு சென்றதால் நிம்மதியாக உள்ளார் விஜயா. பின் வீட்டில் ரோஹினி சமையல் அறைக்கு செல்ல அங்கு தண்ணீரில் வால் வழுக்கி விழும் நேரத்தில் அவர் பின்னால் வந்த விஜயா அவரை அப்படியே கை கொடுத்து தாங்கி பிடிக்கிறார்.
