ஜீவா அரியர் கிளியர் பண்ண கூடாது.. மீனாட்சியை கவிழ்க்க அப்பத்தா போதும் கணக்கு – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்


தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி வேலையை வேண்டாம் என சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மீனாட்சி கோவிலுக்கு செல்ல புவனா ஆதி யார் என்ற உண்மையை உடைக்கிறாள். ஜீவா செய்தது ஒரே ஒரு தப்புதான் உன்னுடைய விருப்பமில்லாம உன் கழுத்துல தாலி கட்டுனது மட்டும்தான். ஆனால் அதுவும் உன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக செய்ததுதான் என சொல்கிறாள்.

ஜீவா அரியர் கிளியர் பண்ண கூடாது.. மீனாட்சியை கவிழ்க்க அப்பத்தா போதும் கணக்கு - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Serial Today Episode

பிறகு மீனாட்சி ஜீவாவுடன் வண்டியில் வரும்போது ஃபோனில் பாட்டு வைப்பது என அவனது பாணியில் அவனை வெறுப்பேற்றுகிறாள். பிறகு இருவரும் வீட்டுக்கு வர குடும்பத்தினர் எல்லோரும் மீனாட்சி வேலையை சேர்ந்திருப்பாள் என நினைத்துக் கொண்டிருக்க ஜீவா அவ வேலை வேண்டான்னு சொல்லிட்டா என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


சக்தி ஏன் மா என்று கேட்க நல்லா கேளுமா நான் அரியர் கிளியர் பண்ண தான் வேலைக்கு போகலாம் நான் எப்ப அரியர் கிளியர் பண்றது இவன் எப்ப வேலைக்கு போறது என்று ஜீவா சொல்ல மீனாட்சி உங்க பையன் மேல உங்களுக்கும் நம்பிக்கை இல்லையா என்று கேட்கிறாள்.

ஜீவா அரியர் கிளியர் பண்ண கூடாது.. மீனாட்சியை கவிழ்க்க அப்பத்தா போதும் கணக்கு - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Serial Today Episode

அப்பத்தா, தேவி ஆகியோர் அவன் எப்போ அரியர கிளியர் பண்றது நீ எப்ப வேலைக்கு போறது அதெல்லாம் நடக்காத விஷயம் என்று நக்கல் அடிக்கின்றனர். ஜீவாவும் நான் அரியர் கிளியர் பண்ணுவேனே எனக்கே நம்பிக்கை இல்லை என்று சொல்கிறான்.

நீ வேலைக்கு போகணும் என்பது தானே உங்க அம்மாவோட கனவு நீ ஏன் இப்படி பண்ண என்று சக்தி கேட்க மீனாட்சி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். பிறகு தேவி மீனாட்சி சொல்றதெல்லாம் நடக்கவே நடக்காது என்று சொல்ல அப்பத்தா அப்படி சொல்ல முடியாது, அந்த மீனாட்சி நினைக்கிறதை சாதிச்சிட்டா அப்புறம் நம்ம நினைக்கிறது நடக்காது என்று சொல்கிறார்.

ஜீவா அரியர் கிளியர் பண்ண கூடாது.. மீனாட்சியை கவிழ்க்க அப்பத்தா போதும் கணக்கு - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Serial Today Episode

மேலும் அந்த ஜீவா அரியர் கிளியர் பண்ண கூடாது அதுக்கான வேலைகளை நாம பாக்கணும் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *