ரஜினிகாந்த் – ராஷி கண்ணா – ராம் பொதினேனி.. தர்மன் படப்பிடிப்பு புகைப்படம்


Ram pothineni in rajinikanth dharman movie: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தில் ராம் பொதினேனி இணைந்துள்ளார். அந்த புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தர்மன்

ஜெயிலர் 2 படத்தை முடித்த கையோடு சூப்பர்ஸ்டார் கமிட்டான திரைப்படம் தர்மன். ராஜ்கமல் நிறுவனம் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். டிராகன் வெற்றியை தொடர்ந்து சிம்புதான் இவருடைய அடுத்த ஹீரோ என அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்திற்கு முன் தர்மன் படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு படத்தின் பூஜை நாளிலேயே வெளியானது. ஆனால், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பதாக அரசல்புரசலாக பேச்சு அடிபட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

படப்பிடிப்பு புகைப்படம்

தர்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது தர்மன் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினிகாந்த் ஆட்டோவில் வந்து இறங்கிய வீடியோ கூட வைரலாகி வரும் நிலையில், இப்படத்தில் ராம் பொதினேனி இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் விதமாக ராஷி கண்ணா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் சூப்பர்ஸ்டார் – ராஷி கண்ணா மற்றும் ராம் பொதினேனி ஆகிய மூவரும் கைகோர்த்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளனர். இதன் மூலம் இப்படத்தில் ராம் பொதினேனி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது.

இதோ பாருங்க:

மேலும், “தலைவருடன் வேலை பார்த்தது எப்படி இருக்கிறது”? ரஜினிகாந்த் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை ராஷி கண்ணா, “ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் அற்புதமாக இருந்தது. தற்போது அவர் எனது நண்பராகிவிட்டார். நான் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டாலும், அவர் புன்னகையுடன் பொறுமையாக பதிலளிப்பார். அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம்; அவ்வப்போது என்னை கேள்வி செய்வார். எனக்கு பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்; அவரை அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்” என கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *