ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு


தனுஷ் நடிப்பில் அடுத்து ஓம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அந்த படம் அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ஆம் தேதி வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு | Dhanush Om Gets Postponed For Rajini Jailer 2

மரியாதைக்காக..

இந்நிலையில் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

“எங்கள் படத்தின் ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வருகிறது. அவர் மீது இருக்கும் மரியாதை காரணமாக ஓம் படத்தை இன்னொரு தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.


அதே நேரத்தில் தீபாவளிக்கு எங்கள் படம் ரிலீஸ் ஆகாது. சூர்யா சாரின் படம் வந்த தேதியில் வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் முதலில் தேதி அறிவித்தார்கள்.

பெரிய படங்கள் எப்போதும் ஒரு புரிந்துணர்வுடனும், பரஸ்பர மரியாதையுடனும் முடிவுகளை எடுக்க வேண்டும். சினிமா மற்றும் சினிமா துறை நலனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

புது ரிலீஸ் தேதியை விரைவில் நாங்கள் அறிவிக்கிறோம். ஓம் நமச்சிவாயா” என தனுஷ் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.  

 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *