பாரடைஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம்


Paradise movie pre booking collection: நானி நடிப்பில் உருவாகி நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் பாரடைஸ் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாரடைஸ்

தெலுங்கு சினிமாவை தாண்டி தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. நான் ஈ, கேங்லீடர், Hi நானா, தசரா, ஹிட் 3 என பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் பாரடைஸ்.

இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராகவ், சம்பூர்னேஷ், மோகன் பாபு, சோனாலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்பதிவு வசூல்

முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அப்படத்தின் முன்பதிவு கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் இருக்கும். அந்த வகையில், பாரடைஸ் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே முன்பதிவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், நாளை திரையரங்கில் வெளியாகவிருக்கும் பாரடைஸ் திரைப்படம் இதுவரை நடைபெற்றுள்ள டிக்கெட் முன்பதிவில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வரவேற்பாகும். கண்டிப்பாக, முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *