13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
Mandaadi movie 13 days Collection: முன்னணி நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் மண்டாடி திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
மண்டாடி
நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகி விட்டார். நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கிய இவர், விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து கருடன், மாமன் ஆகிய படங்கள் அடுத்தடுத்த கட்டத்தை எட்டினார். தற்போது மண்டாடி திரைப்படம் இவரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க, சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை நாம் பார்த்து வரும் நிலையில், மண்டாடி திரைப்படம் இதுவரை 13 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள மண்டாடி, உலகளவில் இதுவரை ரூ. 109 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வசூல் வேட்டை இந்த வாரமும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
