அசோக் செல்வன் கண்ணீர் மல்க பேசிய தருணம்
அசோக் செல்வன்
அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் அசோக் செல்வன் நடிப்பில் இந்த வாரம் அன்பில் அவன் என்ற படம் வரவுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அசோக் செல்வன், இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிக பட்ஜெட் சென்றதால் சொந்த வீட்டை அடமானம் வைத்து தான் இந்த படத்தை எடுத்தோம், ரொம்ப நன்றி அம்மா, அப்பா என அசோக் செல்வன் கூறியுள்ளார்.
அதோடு குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும், ஆனால் என் மகனின் கனவு முக்கியம் என அவருடைய பெற்றோர் சொன்னதாக அசோக் செல்வன் உருக்கமாக பேசியுள்ளார்.
