5 வருடமாக ஓடும் சன் டிவி முக்கிய சீரியல் முடிகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சன் டிவியில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய சீரியல் கிளைமாக்ஸ் தற்போது விரைவில் வர இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
5 வருடமாக 1500 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியல் தான் முடியப்போகிறது.
கிளைமாக்ஸ்
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்து வரும் இந்த தொடர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி இருந்தது. படக்குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சீவ் ஷூட்டிங் வர மறுக்கிறார் என செய்தி வெளியானது. அதனால் கதாபாத்திரம் கோமாவில் இருப்பது போல கதை நகர்கிறது.
இந்த நிலையில் தான் கயல் சீரியல் தற்போது முடிய இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
