பரபரப்பாக தயாராகும் பரதநாட்டிய மேடை.. ரேவதி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்


தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி சொன்ன டாகுமெண்டில் கையெழுத்து போட போகும் சமயத்தில் கார்த்திக் தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கார்த்தி நான் இந்த குடும்பத்தை சேர்க்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன் ஆனா நீ கையெழுத்து போட்டா ஒரு காலமும் இது நடக்காது என ரேவதியை திட்டுகிறான்.


அதன் பிறகு, பாட்டி கோவில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகளை கவனிக்க சொன்ன கார்த்திக் பரதநாட்டியம் ஆடுவதற்கான வேலைகளை கவனிக்க செல்கிறான். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான்.

பரபரப்பாக தயாராகும் பரதநாட்டிய மேடை.. ரேவதி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Serial Today Episode Sep 11 2026

மறுபக்கம் சிவனாண்டி ரவுடி ஒருவனை சந்தித்து அவனிடம் பணமும் துப்பாக்கியையும் கொடுத்து பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் போது ரேவதியை போட்டு தள்ள வேண்டும் சொல்கிறான்.


இதையடுத்து ரேவதி பரதநாட்டிய மேடைக்கு கிளம்பி வர அங்கு அவளுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். சாமுண்டீஸ்வரி வீட்டிலே ராஜராஜன், ரோகினி, மயில்வாகனம் ஆகியோர் ரேவதியின் பரத நாட்டியத்தை பார்க்க கிளம்பி வருகின்றனர்.


சந்திரகலா இதை போட்டு கொடுத்து சாமுண்டீஸ்வரி அழைத்துக்கொண்டு ஒரு பரதநாட்டிய டான்ஸர் வீட்டுக்கு வருகிறாள். இந்த ஊர்லயே சிறந்த பரதநாட்டிய டான்சர் நீங்கதான்.. ஆனா கார்த்திக் உங்கள வேண்டாம்னு சொல்லிட்டு ரேவதிக்கு இந்த வாய்ப்பு கொடுத்து இருக்காரு என்று சொல்லி அவளை ஏற்றி விட்டு நிகழ்ச்சிக்கு வந்து பிரச்சனை செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.

பரபரப்பாக தயாராகும் பரதநாட்டிய மேடை.. ரேவதி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Serial Today Episode Sep 11 2026

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *